வாசகர்கள் கருத்துகள் (1)
இவர்கள் பிரிந்தது உண்மையில் மன வருத்தம் அளிக்கிறது. எதற்கு தேவையற்ற ego?
இசையமைப்பாளர் ஜி.வி .பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டு சட்டப்படி விவாகரத்துப் பெற்றார்கள். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அதோடு ஜி.வி.பிரகாஷை பிரிந்து விட்டபோதும், அவர் இசையமைக்கும் படங்களில் அவ்வப்போது பின்னணி பாடுவதோடு, அவர் நடத்தும் இசையை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பாடி வருகிறார் சைந்தவி.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு திரைப்படங்களுக்கான மாநில அரசு விருது அறிவித்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் 'அசுரன்' படத்துக்காக சைந்தவி பாடிய 'எள்ளு வய பூக்கலையே' என்ற பாடலுக்கு அவருக்கு சிறந்த பாடகிக்கான விருது கிடைத்தது. இதையடுத்து தனது இணையப் பக்கத்தில், 'என்னை நம்பிய ஜி.வி.பிரகாஷ் சாருக்கு நன்றி' என ஒரு பதிவு போட்டுள்ளார் சைந்தவி.
அதோடு தமிழக அரசுக்கும், விருது தேர்வுக்குழு மற்றும் அசுரன் படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இந்த அசுரன் படப் பாடலைப் பொறுத்தவரை முதலில் சைந்தவி டிராக்தான் பாடியிருந்தார். வேறு பாடகியை வைத்த அந்த பாடலை பாடதான் திட்டமிட்டிருந்தார் ஜி.வி.பிரகாஷ் குமார். ஆனால் சைந்தவி டிராக் பாடியதை கேட்ட அசுரன் பட இயக்குனரான வெற்றி மாறன், இதுவே ரொம்ப சிறப்பாக உள்ளது. இதை அப்படியே படத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் பிரிந்தது உண்மையில் மன வருத்தம் அளிக்கிறது. எதற்கு தேவையற்ற ego?