‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ரிலீஸில் நீடிக்கும் குழப்பம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், கிர்த்தி ஷெட்டி, கவுரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'எல்.ஐ.கே' எனும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, அனிரூத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே ஓரிரு முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு கடைசியாக கடந்த வருடம் டிசம்பர் 18ம் தேதி அன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். அப்போதும் படம் வெளியாகவில்லை. இப்போது வரை படம் வெளியீடு பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.
இதற்கிடையே காதலர் தினத்தை முன்னிட்டு பிப்., 13ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாகவும், படத்தை தணிக்கை வாரியத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் செய்தி பரவியது. ஆனால் படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் வியாபாரத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்காததால் தணிக்கை பணியை தள்ளி வைத்துவிட்டார்களாம். இதனால் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. படக்குழு அறிவிக்கும் வரை இப்படம் பற்றிய ரிலீஸ் தொடர்பான கேள்விக்கு எந்த ஒரு தெளிவான விடையும் கிடைக்காது.