உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு

துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு

மலையாளம், தமிழை விட தெலுங்கு ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பை பெற்ற துல்கர் சல்மான் தற்போது அங்கு தான் கவனம் செலுத்தி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவரது 41வது படம் தெலுங்கில் உருவாகி வருகிறது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை இயக்குனர் ரவி நெலகுடி இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிகர் ஜெகபதிபாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்கிற தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஜெகபதிபாபுவின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் இந்த படத்தில் இடம்பெறும் அவரது கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளனர். துல்கர் சல்மானுடன் அவர் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !