நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்
ADDED : 11 hours ago
தெலுங்கில் நானி நடித்து வரும் புதிய படம் ‛தி பாரடைஸ்'. ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியுள்ள இதில் நானியுடன் ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி, ஈஸ்வரி ராவ், மோகன் பாபு, சம்பூர்ணேஷ் பாபு என பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை மார்ச் 26ம் தேதி வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாததால் ஆகஸ்ட் 21க்கு தள்ளி வைத்துள்ளார்கள். மேலும், தற்போது நானியின் ஓப்பனிங் பாடல் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் படக்குழு அறிவித்திருக்கிறது. அதோடு, ஆகஸ்ட் 21ம் தேதி என்கிறபோது ஓணம் பண்டிகை, மீலாது நபி, ரக்ஷா பந்தன் என பல விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வருவதால் அதை டார்கெட்டாக வைத்து இந்த தேதியை படக்குழு தேர்வு செய்துள்ளதாம்.