உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல்

சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல்

பாலிவுட் நடிகர் சல்மான்கான் கடந்த வருடம் வெளியான கிசி கா பை கிசி கி ஜான் மற்றும் சிக்கந்தர் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது பேட்டில் ஆப் கல்வான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ராணுவ பின்னணியை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. கதாநாயகியாக சித்ரங்கதா சென் நடிக்க, அபூர்வா லகியா இயக்கி வருகிறார்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த 2020ல் கல்வான் பகுதியில் நடைபெற்ற சண்டை பின்னணியில் இந்தப் படம் உருவானாலும் கூட இந்த படத்திலும் காதல் இருக்கிறது. அந்த வகையில் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தில் இருந்து மெயின் ஹூன் என்கிற காதல் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அயான லால் என்பவர் இசையமைத்துள்ளார், ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !