மோகன்லால், குஷ்பூ மகள்களின் அறிமுக பட டைட்டிலில் ஒற்றுமை
மலையாளத்தில் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் டைரக்ஷன் கற்றுக் கொண்டாலும் கூட பின்னர் தந்தையின் பாதையை பின்பற்றி நடிப்பில் இறங்கி தற்போது வெற்றிகரமான ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அவரது மகள் விஸ்மயாவும் 'தொடக்கம்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 2018 படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த நிலையில் தான் நடிகை குஷ்பூ, சுந்தர்.சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவும் மலையாளத்தில் உருவாகும் 'ஆரம்பம்' என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இந்த இரண்டு வாரிசு நடிகைகள் அறிமுகமாகும் முதல் பட டைட்டில்கள் 'தொடக்கம், ஆரம்பம்' என ஒரே அர்த்தம் வரும் விதமாகவும் முதல் படத்திற்கு பொருத்தமான டைட்டில் ஆகவும் அமைந்திருப்பது தான் ஆச்சர்யமான விஷயம்.