உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!


கடந்த 2024ம் ஆண்டில் தெலுங்கில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'கல்கி 2898 ஏ.டி'. இந்த படம் பான் இந்திய அளவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. கடந்த வருடங்களாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மக்கள் மத்தியில் பெரிதளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

ஏற்கனவே கல்கி 2898 ஏ.டி இரண்டாம் பாகத்தில் இருந்து தீபிகா படுகோன் ஒரு சில காரணங்களால் வெளியேறுவதாக அறிவித்திருந்தார். இதனால் தீபிகா படுகோன் நடித்த கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளார் என்கிற தகவல் வெளியானாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் கல்கி 2898 ஏ.டி 2ம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று சங்கர் பள்ளியில் தொடங்கியுள்ளது. இந்த கட்ட படப்பிடிப்பை அமிதாப்பச்சன் மற்றும் கமல்ஹாசன் காட்சிகளுடன் தொடங்கியுள்ளனர். பிரபாஸ் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !