உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உதய்ப்பூர் சென்றடைந்த திருமண ஜோடி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

உதய்ப்பூர் சென்றடைந்த திருமண ஜோடி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா, கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா இருவரும் தெலுங்குப் படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்த போது காதல் வயப்பட்டார்கள். ஆனால், இருவரும் காதலிப்பதாக இதுவரையில் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

கடந்த வருடம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த மாதம் பிப்ரவரி 26ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதெனவும் கடந்த சில வாரங்களாக செய்திகள் வந்தன. அதையும் அறிவிக்காமல் இருந்தவர்கள் நேற்று இரவு தங்களது திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனாலும் அந்த அறிவிப்பில் தேதி மற்றும் நேரம் என எதுவும் குறிப்பிடப்படவில்லை. தங்களது திருமண நிகழ்வை 'விரோஷ்' என்று பெயர் வைத்துள்ளோம் என்பதாக மட்டுமே தெரிவித்திருந்தார்கள்.

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற உள்ள திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஆகியோர் தங்களது நண்பர்களுடன் இன்று காலை உதய்ப்பூர் சென்றடைந்தனர். அவர்கள் விமான நிலையத்தில் இறங்கிச் சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என குறைந்த நபர்களுடன் திருமணம் நடைபெற உள்ளதாகச் சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !