உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தாய் கிழவி' துவங்கும் முன்பே, அடுத்த படத்திற்கும் இயக்குனரை முடிவு செய்த சிவகார்த்திகேயன்

'தாய் கிழவி' துவங்கும் முன்பே, அடுத்த படத்திற்கும் இயக்குனரை முடிவு செய்த சிவகார்த்திகேயன்


நடிகர் சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி 'கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, குரங்கு பெடல், கொட்டுக்காளி' உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். தற்போது அவரது தயாரிப்பில் ராதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் 'தாய் கிழவி' படம் வரும் பிப்ரவரி 27ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு சிவகார்த்திகேயன் பேசும்போது, “இயக்குனர் சிவக்குமார் முருகேசன் கிராமத்து பின்னணியில் அற்புதமாக கதை சொல்வதில் வல்லவர். பொதுவாக என் தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக யாரையும் இரு படங்களுக்கு ஒப்பந்தம் போடுவதில்லை என்ற முடிவுடன் இருந்தேன். ஆனால், தாய் கிழவி கதையை சிவக்குமார் முருகேசன் சொன்ன அன்றைக்கே, எனது அடுத்த படமும் அவரே இயக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

நிறைய பேர், தாய் கிழவி பார்த்த பிறகே அதே இயக்குனருடன் 'சேயோன்' படத்தில் சேர்ந்திருப்பதாக நினைக்கலாம். ஆனால் தாய் கிழவி கதை சொன்ன அன்றைக்கே நான் எடுத்த முடிவு. அதை கொஞ்ச நாட்களுக்கு பிறகுதான் சிவக்குமாரிடம் தெரிவித்தேன். சிவக்குமார் முருகேசனுக்காக ஒரே இயக்குனருக்கு இரண்டு படம் செய்வதாக எனது எண்ணத்தை மாற்றிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தை இயக்கிய அவரது நண்பரான அருண்ராஜா காமராஜுக்கு கூட அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், தாய் கிழவி பட இயக்குனருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருப்பது ஒரு ஜாக்பாட் பரிசு தான் என்று சொல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !