உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் நடிக்க வரும் ரம்பா

மீண்டும் நடிக்க வரும் ரம்பா

ரம்பா, இந்த பெயரை கேள்விப்படாத 90 கிட்ஸ் யாருமே இருக்க முடியாது. 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் 'அழகிய லைலா...' பாடலில் ரம்பாவின் ஆடை பறக்கும் நடனத்தை யாருமே மறக்க முடியாது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விஜயகாந்த், அர்ஜூன், கார்த்தி, பிரசாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ள ரம்பா தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சுமார் 15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ரம்பா, அவ்வப்போது சின்னத்திரையில் மட்டும் தலைகாட்டி வந்தார். டான்ஸ் போட்டிகளில் நடுவராக இருந்து வருகிறார். தற்போது விரைவில் வெள்ளித்திரைக்கும் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.

இதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து ஸ்லிம் ஆகியுள்ளார். புதிய கதைகள் கேட்டு வரும் ரம்பா, ஓரிரு கதைகளை தமிழ் தெலுங்கில் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் மறுபிரவேசம் எடுக்கவுள்ளார் ரம்பா. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !