உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன்

சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன்

டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன், தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். அதன்பிறகு கவின் நடிக்கும் ஒன்பதாவது படம் மற்றும் மேட் இன் கொரியா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், மறைந்த நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக, சவுந்தர்யா சினிமாவில் வந்த வேகத்திலேயே ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் மற்றும் சிரஞ்சீவி, நாகார்ஜுனா என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி இடத்தை பிடித்தார். தனது நடிப்பாலும் வசீகரத்தாலும் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்து இழுத்து வைத்திருந்தார். அதனால் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் பிரியங்கா மோகன்.

கடந்த 2004ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக சவுந்தர்யா சிறிய விமானத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி தனது 31 வது வயதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !