உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது!

'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது!

'கர்ணன்' படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் தனுஷின் 56வது படத்தை இயக்குவதாகவும், இதனை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது.

கடந்த சில மாதங்களாக இதன் முன் தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மாரி செல்வராஜ் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷ் 56 படம் குறித்து கூறியதாவது, அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். செப்டம்பரில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது ஒரு பேண்டஸி, வரலாற்று மற்றும் அரசியல் கலந்த திரைப்படமாக உருவாகிறது. என் கேரியரில் மிகப்பெரிய படமாக அமையும்.
என் படங்களுக்கு ஒரு தொடங்கப்புள்ளி இருந்தது. அதுவே 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை' மற்றும் 'பைசன்'படங்கள் எடுக்க காரணமாக இருந்தது. என் அடுத்த படத்தில் அந்த தொடக்கத்தின் ஆணிவேரை பற்றி சொல்லப்போகிறேன். அதை கண்டுபிடித்து முழுவதுமாக அழிக்க முயன்றால் என்ன நடக்கும் என்பதே, தனுஷ் நடிக்கும் படத்தின் கரு. ” எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !