தான் எழுதிய 'மைல்கல்' புத்தகத்தை ரஜினியிடம் பரிசாக கொடுத்த இயக்குனர் ஞானவேல்
ஜெய்பீம் படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் த.செ.ஞானவேல் இதனை தொடர்ந்து தனது இரண்டாவது படமாக ரஜினிகாந்த் நடிப்பில் 'வேட்டையன்' படத்தை இயக்கும் அளவிற்கு உயர்ந்தார். ஆனாலும் அந்த படம் எதிர்பார்த்த அளவு இவர்கள் கூட்டணிக்கு வெற்றியை தரவில்லை. ஒரு பக்கம் தனது அடுத்த படத்திற்கு ஞானவேல் தயாராகிக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் அவர் ஒரு எழுத்தாளர் என்பதால் தொடர்ந்து புத்தகங்களையும் எழுதி வருகிறார்.
இதற்கு முன்னதாக 'தமிழ் மண்ணே வணக்கம், சொல்லாததும் உண்மை, திருப்புமுனை' உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார், தற்போது 'மைல்கல்' என்கிற புத்தகத்தை எழுதியுள்ளார். இதனையடுத்து ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரிடம் மைல்கல் புத்தகத்தின் ஒரு பிரதியை பரிசாக கொடுத்துள்ளார் ஞானவேல். இது குறித்த புகைப்படம் ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.