உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி

சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி


இயக்குனர்கள் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் இருவருமே வெவ்வேறு கதை களங்களில் இயக்குனராக கலக்கியவர்கள். சமீபகாலமாக இருவருமே நடிப்பில் அதிகமான படங்களில் நடித்து வருகின்றனர். ராம் சக்ரீ இயக்கத்தில் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் இருவரும் இணைந்து 'கார்மேனி செல்வம்' என்கிற புதிய படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருவதாக இருந்தது. பின்னர் ஒரு சில காரணங்களால் வெளியாகவில்லை. சில மாதங்கள் கழித்து இப்போது 'கார்மேனி செல்வம்' திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 3ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !