உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது!

யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது!


யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் 'கெணத்த காணோம்'. அவருக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ள இந்த படத்தை 'ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை' படங்களை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். ஜார்ஜ் மரியம், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைத்திருக்கிறார்.

இந்த 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலரை இன்று நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். அந்த டிரைலரில், ஒரு கிராமத்தில் உள்ள கோவிலில் பூசாரியாக இருக்கிறார் யோகி பாபு. திடீரென்று அந்த ஊரில் தண்ணீர் பஞ்சம் அதிகரிக்கும் நிலையில் குடிதண்ணீருக்காக தோண்டப்படும் குழியால் ஒரு பெரும் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் அரசாங்கத்தால் அவர்கள் ஊரையே காலி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே இந்த கெணத்த காணோம் படத்தின் கதையாக உள்ளது. இப்படம் வருகிற 13ம் தேதி திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !