ஜனநாயகன் ரீ சென்சார் ஒத்தி வைப்பு?
விஜய் நடித்துள்ள ‛ஜனநாயகன்' படத்தின் ரீ சென்சார் இன்று மதியம் நடக்க இருந்த நிலையில் திடீரென படம் பார்ப்பதை சென்சார் போர்டு ஒத்தி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் கூறுகையில், ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய ஜன நாயகன் படம் கோர்ட், சட்ட சிக்கல், சென்சார் பிரச்னை காரணமாக கடந்த 2 மாதமாக தவித்து வருகிறது. முதலில் சட்டபிரச்னைகளை முடித்து, வழக்கை வாபஸ் வாங்கியது படக்குழு. அதனால் இன்று. மாலை ரீ சென்சாருக்கு ஏற்பாடுகள் நடந்தன.
புது சென்சார் போர்டு உறுப்பினர்கள் படம் பார்க்க இருந்தனர். விரைவில் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும் என படக்குழுவினர் ஆர்வமாக இருந்தனர். ஆனால் சிலருக்கு உடல்நல பிரச்னை ஏற்பட, அவர்கள் வர முடியாத காரணத்தால் இன்று அவர்கள் படம் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இன்று நடக்க இருந்த ரீ சென்சார் ரத்தான நிலையில் மார்ச்17ம் தேதி ஜன நாயகன் ரீ சென்சார் பணிகள் நடக்கும் என தகவல் கிடைத்துள்ளது. இதனால் பட ரிலீஸ் மேலும் தாமதம் ஆக வாய்ப்புள்ளது.
இது தற்காலிக பிரச்னை தான். விரைவில் படம் பார்ப்பார்கள், ஆனால் படம் எப்போது ரிலீஸ் என்பதை படத்தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும். மார்ச் 18ல் ஜனநாயகன் வர வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள். அது நடக்குமா, மீண்டும் சென்சார் பிரச்னை வருமா என தெரியவில்லை என்கிறார்கள்.