உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம்

பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம்


கடந்த ஆண்டு நடந்த கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்ற மோனலிசா என்ற இளம் பெண் சமூக வலைதளங்களில் திடீர் பிரபலமானார். அவரது அழகும், காந்த கண்களும், வசீகர சிரிப்பும் அனைவரையும் கவர்ந்தது. அவர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே. இந்த திடீர் பிரபலத்திற்கு பிறகு அவருக்கு பாலிவுட் சினிமா வாய்ப்புகள் வந்தது. தற்போது அவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

அதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது. இதற்காக வந்திருந்த மோனலிசா திருவனந்தபுரத்தில் தங்கி இருந்தார். இந்த நிலையில் அவர் திருவனந்தபுரம் அருகே உள்ள பூவார் அருமனூர் நயினார் கோவிலில் முகமது பர்மான் என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார்.

இஸ்லாம் மதத்தை சேர்ந்த முகமது பர்மானை மோனலிசா கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இது மாதம் மாறிய காதல் என்பதால் இருதரப்பு குடும்பத்திலும் எதிர்ப்பு இருந்தால் கேரளாவிற்கு வந்த இடத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நான் இந்து முறைப்படிதான் திருமணம் செய்து கொண்டேன். இது 'லவ் ஜிகாத்' கிடையாது. நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். எல்லா மதங்களையும் சமமாகவே கருதுகிறேன். இது தனது சுய விருப்பத்தின் பேரில் நடந்த திருமணம். கேரளா பாதுகாப்பான இடமாகத் தெரிந்ததால் இங்கு திருமணம் செய்துகொண்டோம் என்று மோனலிசா தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !