உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு!

மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு!


ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா 'கருப்பு' படத்தில் நடித்துள்ளார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக சூர்யா ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக காத்திருக்கின்றனர். ஏற்கனவே கருப்பு படம் ஏப்ரல் 10ம் தேதியன்று திரைக்கு வரும் என கூறப்பட்டது, சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஒரு வீடியோவின் மூலம் ஏப்ரல் 10ந் தேதியன்று கருப்பு படம் திரைக்கு வராது என உறுதி செய்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளதால், மே இரண்டாம் வாரத்தில் கருப்பு படத்தை திரைக்கு கொண்டு வரலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !