மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக்
ADDED : 8 hours ago
இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி வெற்றி கூட்டணியில் வெளியான 'பிச்சைக்காரன்' படத்திற்கு பிறகு மீண்டும் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி 'நூறு சாமி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷன், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை வருகின்ற மார்ச் 16ந் தேதியன்று வெளியிடுவதாக இன்று அறிவித்துள்ளனர். இதில் இப்படம் மே 1ம் தேதியன்று திரைக்கு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர்.