உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: சார்லி சாப்ளின் தோற்றத்தில் வலம் வந்த நடிகர்

பிளாஷ்பேக்: சார்லி சாப்ளின் தோற்றத்தில் வலம் வந்த நடிகர்


ஹாலிவுட் காமெடி நடிகர் சார்லி சாப்ளின் தோற்றதில் பலர் நடித்துள்ளார். கமல்ஹாசன் 'புன்னகை மன்னன்' படத்தில் நடித்தார். 'சாப்ளின் செல்லப்பா' என்ற ஒரு நடிகரே இருந்தார். என்றாலும் சார்லின் சாப்ளின் தோற்றத்திலும் அவரது சாயலிலும் நடித்தவர் எம்.என்.கிருஷ்ணன்.

ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் அளவிற்கு இவர் புகழ்பெறவில்லை. சபாஷ் மீனா, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படங்களில் நடித்தார். இதுதவிர 'ராஜா ராணி, புதையல், ஆரவல்லிக், ரங்கூன் ராதா, நல்ல தீர்ப்பு, பத்தாம் பசலி, திரும்பிப்பார், நல்லவன் வாழ்வான், குறவஞ்சி, பூமாலை, வாழ்க்கை வாழ்வதற்கே, கவலையில்லாத மனிதன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

பின்னர் அரசியில் தீவிரமாக குதிப்பதற்காக சினிமாவை விட்டு விலகியவர். அரசியலிலும் ஜெயிக்க முடியாமல் போனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !