உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ராஷ்மிகா மந்தனா

சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ராஷ்மிகா மந்தனா

சமீபத்தில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, அதைத்தொடர்ந்து மைஸா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக மூன்றாவது முறையாக ரணபலி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கில் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, தீக்க்ஷித் ஷெட்டி நடிப்பில் கடந்த நவம்பர் 7ம் தேதி திரைக்கு வந்த படம் தி கேர்ள் பிரண்ட். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. என்றாலும் ராஷ்மிகாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதில் நடித்ததற்காக தெலுங்கானா அரசின் கட்டார் திரைப்பட விழாவில் அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது கொடுக்கப்பட்டுள்ளது.

ராஷ்மிகா கூறுகையில், ‛‛சினிமாவில் ஆரம்ப காலத்தில் என் நடிப்பை பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் இன்று என்னுடைய நடிப்புக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்திருக்கிறது. இதன் மூலம் மிகப்பெரிய பாதையை கடந்து வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்படுகிறது. இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் ராகுலுக்கு நன்றி'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !