உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காளிதாஸ் 2 : பரத்துக்கு வெற்றியை கொடுக்குமா?

காளிதாஸ் 2 : பரத்துக்கு வெற்றியை கொடுக்குமா?

ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் பரத், ஷீத்தல் நடித்த ‛காளிதாஸ்' படம் 2019ம் ஆண்டு வெளியாகி ஓரளவு பேசப்பட்டது. பரத்தின் சினிமா வாழ்க்கையிலும் வெற்றியை கொடுத்தது. அடுத்து வந்த பல படங்கள் பரத்துக்கு பிரேக் கொடுக்கவில்லை. சில ஆண்டுகளாக வெற்றிக்காக பரத் காத்திருக்கிறார். இந்நிலையில், ஏப்ரல் 3ம் தேதி ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் பரத் நடித்த காளிதாஸ் 2 வருகிறது. இதில் பூவே உனக்காக சங்கீதா, அபர்ணதி, பவானிஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார் பரத். முதல்பாகம் மாதிரியே இந்த படத்துக்கும் வரவேற்பு கிடைக்கும், நீண்ட காலத்துக்குபின் வெற்றி கிடைக்கும் என அவரும் நம்பிக்கையுடன் இருக்கிறார். பாய்ஸ் படத்தில் ஷங்கரால் 5 இளைஞர்கள் அறிமுகப்பபடுத்தப்பட்டனர். அவர்களின் சித்தார்த் மட்டுமே ஓரளவு மார்க்கெட் இருக்கிறார். தமன் இசையமைப்பாளர் ஆகிவிட்டார். மணிகண்டன், நகுலுக்கு மார்க்கெட் இல்லை. பரத் நிலைமை இப்படி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD
2026-03-31 15:08:34

இனி ஹீரோ காக படம் ஒட போவது மிகவும் குறைவு ஆகும்.. ஆர்யா அதர்வா விஷால் என்று ஒரு பெரிய கூட்டமே ஒரு வெற்றிக்காக வெயிட்டிங்... பரத்க்கு திறமை உண்டு.. உழைப்பு உண்டு... ஒரு நல்ல கதை அம்சம் வேண்டும்.... கிடைக்கும் kaathu இருக்கவேண்டும்.. இப்போ இருக்கும் ஒரே புத்திசாலி M. சசிகுமார் மட்டுமே.. அவர் manasu போல அவருக்கு என்ன வரும் என்று தெளிவாக தெரிந்து அருமையான கதை தேடி சிறப்பாக தன்னை மெருகு ஏற்றி கொண்டு இருக்கார்.. பல தூரம் பயணம் செய்வார்..