பாலியல் புகார் எதிரொலி ; தொழிலாளர் சம்மேளனத்தில் இருந்து இயக்குனர் ரஞ்சித் சஸ்பெண்ட்
மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் என தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படங்களை கொடுத்தவர் இயக்குனர் ரஞ்சித். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான போது அந்த சமயத்தில் பெங்காலி நடிகை ஒருவராலும் பெங்களூரை சேர்ந்த நடிகர் ஒருவராலும் பாலியல் புகார் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் அவற்றில் போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றத்தின் மூலம் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவர் மீது நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் எர்ணாகுளம் மத்திய போலீசார் இயக்குனர் ரஞ்சித்தை விசாரணைக்கு அழைத்துச் சென்று சில ஆதாரங்களின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளனர்.
இத்தனைக்கும் புகார் கொடுத்தவர் தற்போது இயக்குனர் ரஞ்சித் இயக்கி வரும் படத்தில் நடித்து வரும் நடிகைதான். இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைதான இயக்குனர் ரஞ்சித்தை மலையாள திரை உலகின் தொழிலாளர் சம்மேளனத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளார் அதன் தலைவரான இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன். சம்மேளனத்தில் உள்ள உறுப்பினராக உள்ள ஒருவர் இப்படி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானால் அவரை உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்குவது முதன்மையாக எடுக்கப்படும் நடவடிக்கை என்று அவர் கூறியுள்ளார்.