உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 250 பேரில் இருந்து தேர்வானவர் மாளவிகா மனோஜ் : சொல்கிறார் மீரா கதிரவன்

250 பேரில் இருந்து தேர்வானவர் மாளவிகா மனோஜ் : சொல்கிறார் மீரா கதிரவன்

'ஜோ' மற்றும் 'ஆண் பாவம் பொல்லாதது' படங்களில் நடித்த மாளவிகா மனோஜ், தற்போது 'ஹபிபீ' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு மாளவிகா தேர்வானது குறித்து இயக்குனர் மீரா கதிரவன் கூறியிருப்பதாவது:

மாளவிகா மனோஜ் இந்தப் படத்தில் 'நிலோபர் நிஷா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் அவரை அன்பாக 'நிலா பொண்ணு' என்ற செல்லப்பெயரில் அழைப்பார்கள். இந்தக் கதாபாத்திரத்தை எழுதும்போது, 90களில் வாழ்ந்த ஒரு பெண்ணை இரண்டு காலகட்டங்களில் வேறுபட்ட தோற்றங்களுடன் நம்பகமாக வெளிப்படுத்தக்கூடிய ஒருவரை தேடினேன். அதற்காக 250க்கும் மேற்பட்ட நடிகைகளை ஆடிஷன் செய்தோம். இறுதியில் மாளவிகா மனோஜை பார்த்தவுடன் அவர் தான் சரியான தேர்வு என்று உணர்ந்தேன். குறிப்பாக இந்தக் கதாபாத்திரத்திற்கு கண்களிலேயே உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு பெண் தேவைப்பட்டார் .

அவருடைய கதாபாத்திரம் பெரும்பாலும் வசனங்களைக் காட்டிலும் முகபாவங்கள் மூலமும் உடல் மொழியாலும் நடிப்பை வெளிப்படுத்தக் கூடியது. அதை அவர் எப்படி கையாள்வார் என்று ஆரம்பத்தில் எங்களுக்கு ஆவல் இருந்தது. ஆனால், அவர் அதை மிகவும் திறமையாகக் கையாண்டு எங்களை ஆச்சரியப்படுத்தினார். படத்தை பார்த்த அனைவருமே அவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர். என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !