உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடிக்கும் வெயிலில் ஆனந்தமாய் நீராடிய பிரியங்கா சோப்ரா

அடிக்கும் வெயிலில் ஆனந்தமாய் நீராடிய பிரியங்கா சோப்ரா

பாலிவுட், ஹாலிவுட் என பிரபலமான பிரியங்கா சோப்ரா தற்போது ராஜமவுலி இயக்கி வரும் 'வாரணாசி' தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் ஐதராபாத் வந்தடைந்தார் பிரியங்கா.

ஐதராபாத்தில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடித்து வருகிறது. தினமும் 35 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை இருக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு ஞாயிறு அன்று படப்பிடிப்பு இல்லாததால் அன்றைய தினம் தான் தங்கியுள்ள ஹோட்டல் நீச்சல் குளத்தில் தோழியுடன் ஆனந்தமாய் நீராடிய சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் பிரியங்கா. நீச்சலுக்கு இடையில் மிளகாய் பொடி தூவிய மாங்காய் என அந்த ஞாயிறை அழகாக அனுபவித்தது பற்றி, “ஞாயிறு உண்மையிலேயே ஒரு ஞாயிறாக உணரப்பட்ட தருணம். மற்றும் பிற விஷயங்கள்,” குறிப்பிட்டுள்ளார்.

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஓய்வெடுப்பதும், நமக்குப் பிடித்த விஷயங்களை செய்வதும் ஒரு மனநிறைவான விஷயம் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !