உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : மகனை அறிமுகப்படுத்திய கேஎஸ் கோபாலகிருஷ்ணன்

பிளாஷ்பேக் : மகனை அறிமுகப்படுத்திய கேஎஸ் கோபாலகிருஷ்ணன்

புகழ்பெற்ற குடும்ப பட இயக்குனர் கே.எஸ் கோபாலகிருஷ்ணன். சிவாஜி, ஜெமினி கணேசன் நடிப்பில் ஏராளமான படங்களை இயக்கியிருக்கிறார். தனது மகன் கே.எஸ்.ஜி வெங்கடேசை நடிகராக அறிமுகப்படுத்த விரும்பினார். அதற்காக அவர் இயக்கிய படம் ‛அத்தை மடி மெத்தையடி'.

சின்னத்துரை தயாரித்த இந்த படத்துக்கு எஸ்.ஆர்.வாசு இசையமைத்தார். பல்லவி, இளவரசி, மாது மோகன், வெண்ணிற ஆடை மூர்த்தி, கோபி கிருஷ்ணராவ், லூஸ் மோகன், முருகேஷ், நாகராஜ், எஸ்.எஸ்.சந்திரன், மேஜர் சுந்தர்ராஜன், கவுசல்யா, மேஜிக் ராதிகா, மஞ்சு, பல்லவி, பிரமீளா, ஷோபா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை மகனுக்காக களம் இறக்கினார்.

ஆனாலும் படம் பெரிய வரவேற்பு பெறவில்லை. அதன்பிறகு வெங்கடேஷ் நாளைய செய்தி, மைந்தன், ஆசையில் ஒரு கடிதம் இங்கிலீஷ்காரன், சதுரங்க வேட்டை உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். பின்னர் சின்ன திரையிலும் நடித்தார். ஆனால் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் தனது மகன் பெரிய ஹீரோவாக வெற்றி பெறுவான் என்று கண்ட கனவு பலிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !