மீண்டும் வெளியாகிறது 'அமர்க்களம் '
ADDED : 1 hours ago
அஜித்தின் 25வது படம் 'அமர்க்களம்'. அவரது கேரியரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த படம் இந்தப் படத்தில் நடித்த போதுதான் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சரண் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியானது. இதற்கு முன்பு மென்மையான காதல் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்த அஜித், இந்த படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தார். இந்த ஆக்ஷன் அவதாரம்தான் இன்று அவரின் மாஸ் ஐகான் இமேஜூக்கு அடித்தளம் அமைத்தது. இந்த படம் வருகிற 24ம் தேதி அஜித் - ஷாலினி திருமண நாள் அன்று மறு வெளியீடு செய்யப்படுகிறது. 4கே டிஜிட்டல் வடிவத்தில் பெரிய திரையில் மீண்டும் வருகிறது. அன்றைய தினம் தான் விஜயின் ‛சிவகாசி' படமும், மாதவனின் ‛ரன்' படமும் ரீ-ரிலீஸாகிறது. ஆக ஒரேநாளில் மூன்று முன்னணி நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸாக போகின்றன.