உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாடகி ஆஷா போஸ்லே உடல் அரசு மரியாதையுடன் தகனம்

பாடகி ஆஷா போஸ்லே உடல் அரசு மரியாதையுடன் தகனம்


மறைந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரியான ஆஷா போஸ்லே, தனது 9 வயதிலேயே பாட தொடங்கினார். சுமார் 80 ஆண்டுகளாக தொடர்ந்த இவரது இசைக்குரல் நேற்றுடன் (ஏப்.,12) ஓய்ந்தது. மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த ஆஷா போஸ்லே, நேற்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 92.

மும்பையின் லோயர் பரேல் பகுதியில் ஆஷா வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை 11 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. ஆஷா போஸ்லே உடலுக்கு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், அம்மாநில அமைச்சர் ஆசிஷ் ஷெலர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, மாலையில் சிவாஜி பாா்க்கில் முழு அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாலிவுட் நடிகர்கள் அமீர்கான், விக்கி கவுசல், இசையமைப்பாளர் அனு மாலிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதி சடங்குகள் முடிந்து, ஆஷா போஸ்லே உடல் தகனம் செய்யப்பட்டது.

பத்ம விபூஷண் விருது பெற்ற ஆஷா போஸ்லே ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !