உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஆக்சன் ஹீரோவாக நடித்த கே. பாலாஜி

பிளாஷ்பேக்: ஆக்சன் ஹீரோவாக நடித்த கே. பாலாஜி


பழம்பெரும் நடிகரான கே பாலாஜி ஆரம்ப காலகட்டங்களில் சில படங்களில் நாயகனாக நடித்தார். அதன்பிறகு அவர் நடித்தது எல்லாமே குணச்சித்திர வேடங்கள் தான். பெரும்பாலான படங்களில் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்தார்.

அவர் ஆக்சன் ஹீரோவாக நடித்த படம் 'அழகர்மலை கள்வன்'. 1959ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை கன்னட இயக்குனர் கெம்பராஜ் இயக்கி, தயாரித்தார். பி.கோபாலன் இசையமைத்தார். புரட்சி தாசன் வசனங்களை எழுதினார்.

பாலாஜியுடன், நாகைய்யா, காமராஜ், வி.கோபாலகிருஷ்ணன், காக்கா ராதாகிருஷ்ணன், மாலினி, விஜயகுமாரி, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படம் சுமாரான வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் பாடல்கள் மட்டுமே தற்போது காண கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !