ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம்
'வீர தீர சூரன்' படத்திற்குப் பிறகு விக்ரம் நடிக்க உள்ள அவரது அடுத்த படத்தின் அறிவிப்புகளில் சில குழப்பம் நிலவி வந்தது. போடி ராஜ்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்க அவரது 63வது படத்தின் அறிவிப்பை கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிட்டார்கள். அப்படத்தை சாந்தி டாக்கீஸ் தயாரிப்பதாக இருந்தது. அடுத்ததாக '96' படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்க அவரது 64வது படத்தின் அறிவிப்பு கடந்த வருடம் ஜுலையில் வெளிவந்தது. அந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு இதுவரை ஆரம்பமாகவில்லை.
இந்நிலையில் இன்று விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு ஒன்று இன்று மாலை வெளியாக உள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் படத்தைத் தயாரிக்க ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.
இன்று விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ஆனந்த் சங்கர், “நான் பெரிதும் மதிக்கும், போற்றும் மற்றும் உத்வேகம் பெறும் ஒருவரின் பிறந்தநாள் இன்று, அவர் உண்மையிலேயே ஒரு ஜாம்பவான். உண்மையாகச் சொல்வதானால், அவரைப் போன்ற ஒருவருக்கு நாம் என்ன பரிசு கொடுப்பது ?,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.