உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 8 மணிநேரம் சண்டை பயிற்சியில் ஈடுபடும் ராஷ்மிகா

8 மணிநேரம் சண்டை பயிற்சியில் ஈடுபடும் ராஷ்மிகா

திருமணத்திற்கு பிறகு ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்து வரும் படம் மைசா. பழங்குடியின பெண்ணாக அவர் நடிக்கும் இந்த படத்தை ரவீந்திர புல்லே என்பவர் இயக்குகிறார். இதில் ராஷ்மிகா மூர்க்கத்தனமாக தோன்றும் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் கேரளாவில் 16 நாட்கள் நடைபெற உள்ளது. அப்போது அங்கு அதிரடியான சண்டை காட்சிகள் படமாக்கப்படுகிறது.
இந்த சண்டை கட்சிகளுக்காக தற்போது ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் ஆன்ட்டி லாங் என்பவர், பாங்காங் நாட்டில் ராஷ்மிகா மந்தனாவுக்கு சண்டை பயிற்சி கொடுத்து வருகிறார். ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரம் இந்த பயிற்சியில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்தின் கதையும், கதாபாத்திரமும் பெரிய அளவில் இம்ப்ரஸ் செய்ததால், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தன்னை தயார் படுத்திக் கொண்டு, முழு ஈடுபாடு காட்டி ராஷ்மிகா நடித்து வருவதாக கூறுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !