உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அட்லி, பிரியா தம்பதியருக்கு பெண் குழந்தை

அட்லி, பிரியா தம்பதியருக்கு பெண் குழந்தை

‛ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் அட்லி. அதன்பின் விஜயை வைத்து ‛தெறி, மெர்சல், பிகில்' என மூன்று படங்களை தொடர்ச்சியாக தந்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தொடர்ந்து ஹிந்தியில் ஷாரூக்கானை வைத்து ‛ஜவான்' படத்தை இயக்கி ரூ.1000 கோடி வசூலை தந்தார். தற்போது அல்லு அர்ஜூனை வைத்து பிரமாண்ட சூப்பர் ஹீரோ படத்தை இயக்கி வருகிறார்.

நடிகை பிரியாவை காதலித்து 2014ல் திருமணம் செய்தார் அட்லி. இவர்களுக்கு ஏற்கனவே மீர் என்ற மகன் உள்ளார். மீண்டும் கர்ப்பமாக இருந்தார் பிரியா. இவர்களின் வளைகாப்பு நிகழ்ச்சி மும்பையில் நடந்தபோது நடிகர் விஜய் பங்கேற்று வாழ்த்தினார். இந்நிலையில் பிரியா - அட்லி தம்பதியருக்கு இன்று(ஏப்., 20) இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர்கள் மகிகழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள ரசிகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !