ஏப்ரல் 27ல் தொடங்குகிறது சேயோன்
கமல்ஹாசன் தயாரிப்பில், தாய் கிழவி பட இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கும் சேயோன் படம் ஏப்ரல் 27ம் தேதி தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பாக்யஸ்ரீ நடிக்கிறார். இவர் காந்தா படத்தில் துல்கருடன் நடித்தவர். முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கமல் தயாரிக்கும் படம் என்பதால் இதில் அவர் ஒரு பாடலை பாடலாம் அல்லது பாடல் எழுதலாம் அல்லது கவுரவ வேடத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்குமுன்பு சிவகார்த்திகேயனை வைத்து கமல்ஹாசன் தயாரித்த அமரன் படம் பெரிய வெற்றி பெற்றது. 300கோடிக்கு மேல் வசூலித்து, கமலுக்கு 100 கோடி வரை லாபம் பெற்றுக் கொடுத்ததாக தகவல். இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தாய்கிழவி ஹிட் ஆனதால், இந்த இயக்குனருக்கும் நல்ல வரவேற்பு. ஆகவே சேயோன் படம் கமலுக்கு லாபகரமான படமாக இருக்கும் என தகவல். இந்த ஆண்டு அக்டோர் மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளது.