உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மும்பைக்கு குடியேறுகிறாரா அல்லு அர்ஜுன்?

மும்பைக்கு குடியேறுகிறாரா அல்லு அர்ஜுன்?

அட்லி இயக்கி வரும் ராக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இதையடுத்து பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். ராக்கா படப்பிடிப்புக்காக மும்பையில் முகாமிட்டுள்ள அல்லு அர்ஜுன், அடுத்தபடியாக ஐதராபாத்திலிருந்து இடம்பெயர்ந்து மும்பையில் குடியேறப்போவதாக டோலிவுட் ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

இது குறித்து அல்லு அர்ஜுனின் தந்தையான தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இடத்தில் மீடியாக்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத்தை விட்டு வெளியேறும் எந்த எண்ணமும் இல்லை. அவரது குழந்தைகள் இங்கு தான் படிக்கிறார்கள். அவரது வீடு இங்குதான் உள்ளது. அதோடு நெருங்கிய நண்பர்களும் ஐதராபாத்தில் தான் உள்ளார்கள். இது அனைத்தையும் விட்டுவிட்டு அவர் ஏன் மும்பைக்கு செல்ல போகிறார் என்று அந்த செய்திக்கு ஒரு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு அல்லு அரவிந்த் குடியேறப் போவதாக வெளியான செய்தி வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !