உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன்

தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன்


உலக அளவில் ஐமேக்ஸ், டால்பி என அகன்ற திரை கொண்ட தியேட்டர்களில் படங்களைப் பார்ப்பது தனி ரசனை. இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் ஐமேக்ஸ் தியேட்டர்கள் உள்ளன. ஆனால், டால்பி தியேட்டர்கள் இப்போதுதான் வர ஆரம்பித்துள்ளன.

தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டர் ஆக திருச்சி, திருவெறம்பூர் எல்ஏ சினிமாஸ் வளாகத்தில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் அதைத் திறந்து வைத்தார். அந்த வளாகத்தில் மொத்தம் 6 தியேட்டர்கள் செயல்பட ஆரம்பித்துள்ளன. அதில் 484 இருக்கைகள் கொண்ட டால்பி சினிமாஸ் தியேட்டர் இடம் பெற்றுள்ளது. 61 அடி அகலம் 25.5 அடி உயரம் கொண்ட 2.39 : 1 ஸ்கோப் விகித அடிப்படையில் அந்த டால்பி திரை இருக்கும்.

இந்தியாவில் இதற்கு முன்பு திறக்கப்பட்ட டால்பி தியேட்டர்களாக ஹைதராபாத் அல்லு சினிமாஸ், பெங்களூரு எஎம்பி சினிமா1, புனே சிட்டி பிரைட் ஆகியவை உள்ளன.

சென்னைக்கு முன்பாக திருச்சியில் டால்பி தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !