அசத்தல் வீடியோ வெளியிட்ட துருவ் விக்ரம், 'பயர்' விட்ட அனுபமா பரமேஸ்வரன்
நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம், 'பைசன்' படம் மூலம் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார். அப்படத்தில் அவரது ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன். அப்படம் படப்பிடிப்பில் இருக்கும் போதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன. மேலும் இருவரது முத்தப் புகைப்படம் ஒன்றும் வெளியாகி வைரல் ஆனது.
'பைசன்' படத்தின் நிகழ்ச்சிகள், பேட்டிகள் ஆகியவற்றில் துருவ், அனுபமா இருவரும் பங்கேற்ற போது அவர்களுக்கு இடையிலான 'கெமிஸ்ட்ரி' ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
துருவ் விக்ரம் நேற்று தனது 'பாடி பில்டிங்' வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆணழகன் போட்டிகளில் கலந்து கொள்பவர்களைப் போன்ற அசத்தலான உடற்கட்டுடன் அந்த சில வினாடி வீடியோ இருந்தது. அவர் அதைப் பகிர்ந்ததும் முதல் கமெண்ட் ஆக அனுபமா பரமேஸ்வரன் 'பயர்' எமோஜியைப் பதிவிட்டிருந்தார். அவரது கமெண்ட்டிற்கே 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் வந்துள்ளது.
துருவ்வின் இந்தப் பதிவை அவரது அப்பா விக்ரமும் லைக் செய்துள்ளார். ஆக, தமிழ் சினிமாவின் அடுத்த காதல் ஜோடி என துருவ், அனுபமாவைத் தாரளமாகச் சொல்லலாம்.