மீண்டும் ஜொலிப்பாரா கே.எஸ். அதியமான்?
தமிழில் 'தொட்டான் சிணுங்கி, தூண்டில்' ஆகிய படங்களை இயக்கியவர் கே.எஸ். அதியமான். அதன் பின்னர் ஹிந்தி படங்களை இயக்கி வந்தார். கடந்த சில வருடங்களாக இவர் இயக்குனராக எந்தவொரு படங்களையும் இயக்கவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஆக அவதாரம் எடுத்து தமிழில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்திற்கு 'நினைவுகள்' என தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் முதன்மை கதாபாத்திரங்களில் ரேவதி, விதார்த் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் நிறுவனத்தின் மூலம் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தை சில குறிப்பிட்ட விநியோகஸ்தர்களுக்கு சுரேஷ் காமாட்சி திரையிட்டுள்ளார். இதனை பார்த்த விநியோகஸ்தர்கள் வியந்து பார்த்துள்ளனர். தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல பீல் குட் படமாக வந்துள்ளது என்கிறார்கள்.