மே 21ல் திரைக்கு வரும் திரிஷ்யம் 3
ADDED : 2 minutes ago
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகமும் உருவாகி இருக்கிறது. மோகன்லாலுடன் மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஏப்ரலில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது மே 21ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, முதல் இரண்டு பாகங்களில் நடித்த அதே நடிகர் நடிகைகள் மூன்றாம் பாகத்திலும் நடித்தபோதும் இந்த மூன்றாம் பாகத்தில் முந்தைய பாகங்களில் இருந்து மாறுபட்ட திரைக்கதையை கையில் எடுத்து அதை விறுவிறுப்பாக படமாக்கி இருப்பதாக இயக்குனர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.