உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மமிதா பைஜூ கிடுகிடு வளர்ச்சிக்கு செக் வைத்ததா 'கர'

மமிதா பைஜூ கிடுகிடு வளர்ச்சிக்கு செக் வைத்ததா 'கர'


சினிமாவில் வேகமாக முன்னேறுபவர்களுக்கு, அடுத்தடுத்து வெற்றி கொடுப்பவர்களுக்கு சில படங்கள், சில இயக்குனர்கள் செக் வைப்பார்கள். தோல்வி படங்கள் அல்லது தவறான கேரக்டர் கொடுத்து அவர்களின் வளர்ச்சியை குறைப்பார்கள். சில சமயம் அப்படிப்பட்ட படங்கள் தானாகவும் அமைந்துவிடும். 100 கோடி படங்களில் நடித்துக்கொண்டிருந்த பிரதீப் ரங்கநாதனுக்கு 'எல்ஐகே' அப்படிப்பட்ட படமாக அமைந்தது. அந்த படம் 100 கோடி கிளப்பில் இணையவில்லை. பிரதீப் ரங்கநாதனுக்கு நடிப்பிலும் நல்ல பெயர் வாங்கிக்கொடுக்கவில்லை. அவர் மார்க்கெட் லேசாக தள்ளாடியது. அதேபோல், மமிதா பைஜூவுக்கு 'கர' படம் அமைந்துவிட்டது என்று விமர்சனங்கள் எழுகின்றன.

'பிரேமலு' படத்தின் வெற்றியால் தமிழிலும் மமிதாவுக்கு நல்ல வரவேற்பு. அவரை புக் பண்ண இயக்குனர்கள், ஹீரோக்கள் துடித்தனர். அவர் ஹீரோயினாக நடித்த 'டியூட்' படத்துக்கும், அவரின் கேரக்டர், பாடல் காட்சிகளுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. அடுத்து 'ஜனநாயகன், விஸ்வநாதன் அண்ட் சன்ஸ், இரண்டு வானம், கர' உள்ளிட்ட படங்களில் புக் ஆனார்.

நேற்று 'கர' படம் வந்துள்ளது. அதில் மமிதா பைஜூ கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை. அவர் நடிப்பும் விமர்சன ரீதியாக பேசப்படவில்லை. இது அவரின் வளர்ச்சிக்கு ஸ்பீடு பிரேக்கர் என்று கூறப்படுகிறது. இந்த கேரக்டருக்கு முதலில் கன்னட நடிகை சைத்ரா பேசப்பட்டார். அவர் கதை கேட்டு நடிக்காமல் போக, அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு மமிதா நடித்தார். அதுவே அவருக்கு மைனஸ் ஆகிவிட்டது. மமிதா நடித்த ஜனநாயகனும் ரிலீஸ் ஆகாமல் தவிக்கிறது. இப்படியான காலகட்டத்தில் மமிதா கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறார். இனி, இது போன்ற சீரியஸ் ரோலில் நடிக்காமல் ரசிகர்களுக்கு பிடித்த கலகல, யூத் ரோலில் நடிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யாவுடன் அவர் நடிக்கும் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதால் அந்த படம் ஹிட்டாகும் என நம்பிக்கையுடன் இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !