உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'திரிஷ்யம்' படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினேன் ; தனுஷ்

'திரிஷ்யம்' படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினேன் ; தனுஷ்


மலையாளத்தில் கடந்த 2013ல் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான 'திரிஷ்யம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் 2021ல் வெளியாகி அந்த படமும் ஹிட் ஆனது. தற்போது விரைவில் 'திரிஷ்யம் 3' வெளியாக இருக்கிறது. மலையாளத்தில் முதல் பாகம் ஹிட்டான உடனே அதை தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் ஆவலாக போட்டி போட்டுக் கொண்டு ரீமேக் செய்தனர்.

தமிழில் கமல்ஹாசன் நடிக்க, 'பாபநாசம்' என்கிற பெயரில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பே அந்த படத்தை ரீமேக் செய்து இருந்தார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது தனது நடிப்பில் வெளியாகியுள்ள 'கர' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளா சென்றபோது அங்கு பேட்டியில் திரிஷ்யம் படத்தின் உரிமையை வாங்க நான் விரும்பினேன் என்று ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.

இது குறித்து தனுஷ் கூறும்போது, “உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.. இந்த படத்தில் நான் எப்படி அந்த பக்குவப்பட்ட குணாதிசயம் கொண்ட மோகன்லால் கதாபாத்திரத்திற்கு பொருந்துவேன் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஏதோ ஒன்று அந்த படத்தில் நான் நடிக்கவோ அல்லது குறைந்தபட்சம் அதை தயாரிக்கவோ விரும்பினேன். திரிஷ்யம் படத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரங்களையும் விருதுகளையும் தாண்டி அந்த படம் இன்னும் அதிகம் பெற தகுதியான ஒன்று தான். அதன் இயக்குனருக்கும் என்னுடைய அபிமான நடிகராக மோகன்லாலுக்கும் இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்காக என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !