உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'துருவ நட்சத்திரம்' 80 கோடி பட்ஜெட்டில் உருவானது : தயாரிப்பு தரப்பு தகவல்

'துருவ நட்சத்திரம்' 80 கோடி பட்ஜெட்டில் உருவானது : தயாரிப்பு தரப்பு தகவல்

விக்ரம் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் தயாரான படம் 'துருவ நட்சத்திரம்'. பொருளாதார சிக்கல்கள், படத்திற்கு எதிராக தொரடப்பட்ட வழக்குகள் காரணம் கிடப்பில் கிடந்தது. தற்போது நீதிமன்றம் படம் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து பேசி சில நிபந்தனைகளின் பேரில் படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது. விரைவில் படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எங்கள் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் தயாரிப்பில் செய்யப்பட்டுள்ள பெரும் முதலீடு, மற்றும் இத்திரைப்படத்துடன் தொடர்புடைய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரம் மற்றும் திரை வாழ்க்கையை கருத்தில் கொண்டு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். படத் தயாரிப்போடு தொடர்புடைய அனைத்து தரப்பினரின் நலன்களும் போதுமான அளவு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், சில நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்புகளுடன் திரைப்படத்தை வெளியிட அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்கும் மேலாக கணிசமான நேரத்தை ஒதுக்கி, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி, அவர்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கி, அதன்பின் திரைப்படத்தை வெளியிடுவதற்கான உத்தரவை பிறப்பித்த நீதிபதிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதன் தயாரிப்பு செலவு சுமார் ரூ.80 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !