உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு

கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு

சூர்யா நடிப்பில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் கருப்பு. நேற்று முன்தினம் வரை இந்த படம் திட்டமிட்டபடி திரைக்கு வருமா வராதா என்று சூர்யா ரசிகர்கள் கலக்கத்தில் காணப்பட்டார்கள். காரணம் இப்படத்தின் தயாரிப்பாளர் நிதி சிக்கலில் மாட்டியிருந்தார். இப்படியான நிலையில் நேற்று கருப்பு படம் திரைக்கு வந்தது. இப்படி பல தடைகளை தாண்டி திரைக்கு வந்த இந்த படத்தை சூர்யா ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக இந்த படத்தை காண விஜய் ரசிகர்களும் கருப்பு படம் ஓடும் தியேட்டர்களுக்கு படை எடுக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றால், கருப்பு படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காலை 9 மணிக்கு திரையிட விஜய் தலைமையிலான தமிழக அரசு சிறப்பு அனுமதி கொடுத்திருந்தது. அதன் காரணமாகவே தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு சிறப்பு நன்றி என கருப்பு படக்குழு ஒரு கார்டு போட்டுள்ளார்கள். இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து தற்போது கருப்பு படத்தை சூர்யா ரசிகர் மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் வெற்றி பெற வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !