உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி

சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி


ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, சுபாஷ் கே ராஜ் இயக்க அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படம் 'பிளாஸ்ட்'. ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அர்ஜூன், அபிராமி, அவர் மகளாக வரும் ப்ரீத்தி முகுந்தன் மூன்று பேருமே கராத்தே, சண்டைக்கலையில் தேர்ச்சி பெற்றவர்கள், இவர்களின் பலம் தெரியாமல் வில்லன் டீம் மோத என்ன நடக்கிறது என்ற ரீதியில் கதை நடக்கிறது. இந்த மாத இறுதியில் படம் ரிலீஸ்.

சென்னையில் நடந்த விழாவில் பேசிய அபிராமி, ''நான் இந்த கதையை கேட்டவுடன் நடிக்க யோசித்தேன். இந்த மாதிரியான சண்டைக்காட்சியில் நடிக்க முடியுமா என்று சந்தேகப்பட்டேன். ஆனால், இயக்குனர் உற்சாகம் கொடுத்தார். அவர் அம்மாவும் கராத்தேயில் பிளாக் பெல்ட் என்றார். 25 ஆண்டுகளுக்கு பின் 'வானவில்' படத்துக்குபின் இதில் அர்ஜூன் ஜோடியாக நடித்து இருக்கிறார். சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறேன். அதற்கு காரணம் பைட் மாஸ்டர், பைட்டர்கள்தான். அவர்களுக்கு சிறப்பு நன்றி.

எனக்கு கராத்தே சொல்லிக்கொடுத்த மாஸ்டருக்கு நன்றி. அவர்களுக்கு அடிபட்டாலும், எனக்கு உற்சாகம் கொடுத்து சிறப்பாக நடிக்க வைத்தார்கள். அவர்கள் பெயர் யாருக்கும் தெரியாது. சினிமாவில் கடைசியில் போடுவார்கள். அதனால், படத்தின் பங்காற்றிய சண்டைக்கலைஞர்கள் பெயர்கள் அறிவிக்கிறேன்'' என்று சொல்ல அபிராமி சில நிமிடங்கள் அனைவர் பெயர்களை சொல்லி, நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !