ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்'
ADDED : 9 hours ago
யுடியூப் தளத்தில் பிரபலமானவர் வி.ஜே.சித்து. சில டிவி சேனல்களில் விஜே.,வாகவும் இருந்துள்ளார். இவர் சினிமாவில் இயக்கும் முதல் படம் 'டயங்கரம்'. இதை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சித்து என்ஜினியரிங் மாணவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்னும் ஒருவாரம் தான் படப்பிடிப்பு மீதம் உள்ளதாம். அதை முடித்து உடனடியாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளனர். படத்தை ஜூலை மாதத்தில் திரைக்கு கொண்டு வர வேண்டும் என தயாரிப்பாளர் எண்ணி உள்ளாராம்.