ஐமேக்ஸில் ஜெயிலர் 2
ADDED : 6 hours ago
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா, வித்யாபாலன், மிதுன் சக்கவர்த்தி மற்றும் சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஜெயிலர் 2 படம் செப்டம்பர் மாதத்தில் திரைக்கு வருகிறது என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் பெரும்பாலும் இந்திய சினிமாவில் உருவாகும் படங்களை ஐமேக்ஸில் வெளியிட வேண்டும் என்றால் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் காலகட்டத்தில் தான் ஐமேக்ஸ் தரத்திற்கு மாற்றம் செய்வார்கள். ஆனால், ஜெயிலர் 2 படத்தை உருவாக்கும் போதே பல முக்கியமான காட்சிகளை ஐமேக்ஸ் தரத்தில் படமாக்கியுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது.