ஒரு வழியாக திரைக்கு வருகிறார் 'இதயம் முரளி'
ADDED : 16 hours ago
சுதா கொங்கரா இயக்கதில் சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' படத்தை தயாரித்தவர் ஆகாஷ் பாஸ்ரன். அவர் இயக்கி உள்ள படம் 'இதயம் முரளி'. இதில் அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா ஆகியோர் நடித்துள்னர்.தனது டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனே தயாரிக்கிறார். தமன் இசையமைத்துத்ளார்.
தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான ஆகாஷ் பாஸ்கரனுக்கு தனிப்பட்ட முறையில் சில பிரச்னைகள் வந்ததால் அதை சமாளிப்பதில் கவனம் செலுத்தியதால் இதயம் முரளி வெளியீடு தாமதமாகி வந்தது. அந்த பிரச்னைகளிலிருந்து ஆகாஷ் பாஸ்கரன் விடுபட்டுள்ள நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற ஜூலை 10ம் தேதி படம் வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.