உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கருப்பு': 300 கோடி வசூலைக் கடந்து சாதனை!!

'கருப்பு': 300 கோடி வசூலைக் கடந்து சாதனை!!


ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையில், சூர்யா, திரிஷா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் மே 15ல் வெளியான படம் 'கருப்பு'. இரண்டு வாரங்களை நெருங்க உள்ள இந்தப் படம் தற்போது 300 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூர்யாவின் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரையில் எந்த ஒரு படமும் இப்படியான வசூல் சாதனையைப் புரிந்ததில்லை. அவரது அதிகபட்ச வசூல் படமாக 2013ல் வெளியான 'சிங்கம் 2' படம்தான் இருந்தது. அப்படம் மொத்தமாக 120 கோடி வசூலித்தது.

தற்போது 'கருப்பு' படம் தமிழகத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக 130 கோடி வசூலைக் கடந்துள்ளது. ஆறு நாட்களுக்கு முன்னதாக தயாரிப்பு நிறுவனம் உலக அளவிலான வசூல் 207 கோடி என அறிவித்திருந்தது. அதற்குப் பின் உலக அளவிலான வசூல் பற்றி அறிவிக்கவில்லை.

விரைவில் 300 கோடி அறிவிப்புடன் புதிய போஸ்டர் வெளியாகும் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !