உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்சிக் குறித்து கியாரா அத்வானி பகிர்ந்த தகவல்

டாக்சிக் குறித்து கியாரா அத்வானி பகிர்ந்த தகவல்

கேஜிஎப் 2 படத்திற்குப் பிறகு யஷ் நடித்துள்ள படம் டாக்சிக். கீது மோகன்தாஸ் இயக்க, நயன்தாரா, ஹியூமா குரேஷி, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. ரிலீஸ் தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இப்படத்தில் யஷ்க்கு ஜோடியாக நடித்திருக்கும் கியாரா அத்வானி டாக்சிக் படம் குறித்து பேசி உள்ளார்.

அதில், இந்த படம் நான் எதிர்பாராத ஒரு மாறுபட்ட கதையில் உருவாகி இருக்கிறது. அதாவது, ஆண் பெண்ணுக்கு இடையே உறவுகளை நாம் பார்த்து வரும் விதத்தில் இருந்து முற்றிலுமாக மாறி உள்ளது. குறிப்பாக காதலில் இருக்கும் சுதந்திரம் விடுதலையை ஆழமாக கூறுகிறது. இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு காதலில் இவ்வளவு சுதந்திரமாக பயமின்றி இருக்க முடியுமா என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !