உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் 2வது படம் துவக்கம்

அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் 2வது படம் துவக்கம்


சசிகுமார்- சிம்ரன் நடித்த 'டூரிஸ்ட் பேமிலி' என்ற படத்தை இயக்கியவர் அபிஷன் ஜீவிந்த். அந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. அதன்பிறகு 'வித் லவ்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படமும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் அடுத்தபடியாக கவுதமன் சிவராமன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் எமோஷனல் பேமிலி என்டர்டெயின்மென்ட் கதையில் உருவாகிறது. அதோடு தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தை டிராமா கம்பெனி தயாரிக்கிறது.
இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் இடம் பெறுகின்றனர். ஒரு நாயகியாக தெலுங்கில் வெளிவந்த 'லிட்டில் ஹார்ட்ஸ்' படத்தில் நடித்த ஷிவானி நகரம் தான் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மற்றொரு நாயகியாக 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் பிரபலமான யோக லட்சுமி நடிக்கிறார்.
சென்னையில் இப்படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் விரைவில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !