உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கருப்பு' படத்தின் ஆத்தி ராசாத்தி பாடல் வீடியோ வெளியானது!

'கருப்பு' படத்தின் ஆத்தி ராசாத்தி பாடல் வீடியோ வெளியானது!


சூர்யா நடிப்பில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் படம் 'கருப்பு'. ஆர். ஜே. பாலாஜி இயக்கி உள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் திரிஷா, சுவாசிகா, நட்டி நடராஜ், இந்திரன்ஸ், சிவதா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். சாய் அபயங்கர் இசையமைத்திற்கும் இந்த படத்தை ட்ரீம் வாரிய பிக்சர்ஸ் தயாரித்து இருக்கிறது. ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பு பெற்று வரும் இந்த படம் 300 கோடி வசூலை கடந்து ஓடி சூர்யா நடித்த படங்களில் முதல் வசூல் சாதனை படம் என்ற பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

இந்த நிலையில் இந்த கருப்பு படத்தில் இடம்பெற்றுள்ள ஆத்தி ராசாத்தி என்ற வீடியோ பாடலை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது. தாஸ் பெஞ்சமின் பாடியுள்ள இந்த பாடலை பா.விஜய் எழுதியிருக்கிறார். மேலும், இப்படம் ஜூலை பன்னிரெண்டாம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !